Thursday, 24 October 2013

ஈரோடு மாவட்டத்தின் வரலாறு!


தந்தை பெரியார் பிறந்த மண். 1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. சென்னையிலிருந்து தென்மேற்கு திசையில் 400 கிலோமீட்டர் (249 மைல்) தொலைவிலும் காவிரி மற்றும் பவானி ஆறுகளின் நதிக்கரையிலும், தென்னிந்திய தீபகற்பத்தில் மையத்திலும் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. ஈரோடு கைத்தறி, விசைத்தறி ஜவுளி பொருட்கள் மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிப்பிற்கு புகழ் பெற்றது. எனவே இது இந்தியாவின் கைத்தறி நகரம் எனவும் பாரதத்தின் ஜவுளி நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்திலிருந்து 1979 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஈரோடு நகராட்சி 01.01.2008 முதல் 'ஈரோடு மாநகராட்சி' யாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

உற்பத்தி ரகங்களான பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தரைப்பாய்கள், லுங்கிகள், அச்சிடப்பட்ட துணிகள், துண்டுகள், கால்சட்டைகள் போன்ற பொருட்களை மொத்தமாக இங்கே சந்தைப்படுத்தப்படுகின்றன. இது மஞ்சள் மாநகரமாகவும் (Turmeric City) மற்றும் ஜவுளி மாநகரமாகவும் (Textile City) திகழ்கிறது. ஈரோடு கொங்கு நாட்டில் ஒரு முக்கிய நகரமாக உள்ளது. தமிழகத்தில் புகழ்பெற்ற ஊத்துக்குளி வெண்ணெய், காங்கேயம் காளை இரண்டும் ஈரோடு மாவட்டத்தின் சிறப்பு.

இவ்வூரில் பிறந்த புகழ்பெற்ற மனிதர்கள்

தந்தை பெரியார்

பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. இராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர்[1]. இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது.

சீனிவாச ராமானுஜம்

சீனிவாச இராமானுஜன் (டிசம்பர் 22, 1887 - ஏப்ரல் 26, 1920) உலகத்தை வியக்கச் செய்த ஒப்பரிய பெரும் கணித மேதை. இவர் தமிழ் நாட்டிலுள்ள ஈரோட்டில் பிறந்தார். இவருடைய தந்தையார் கும்பகோணம் சீனிவாசய்யங்கார், தாயார் ஈரோடு கோமளத்தம்மாள். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் 1914 முதல் 1918 முடிய உள்ள சில ஆண்டுகளிலேயே 3000க்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.

தீரன் சின்னமலை

மாவீரன் தீரன் சின்னமலை (ஏப்ரல் 17, 1756 - ஜூலை 31, 1805) இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். தமிழகத்தில் பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்துப் போரிட்டவர்களுள் ஒருவர்.

ஈரோடு மாவட்டம் 5 வட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

பவானி
ஈரோடு
கோபிசெட்டிபாளையம்
பெருந்துறை
சத்தியமங்கலம்
இம்மாவட்டத்துடன் இருந்த தாராபுரம், காங்கேயம் வட்டங்கள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரலாறு!



பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது காஞ்சிபுரம், காஞ்சிக்குத் சென்றால் காலாட்டிக் கொண்டே சாப்பிடலாம் என்பார்கள் பாரம்பரிய பட்டு நெசவுக்குப் பெயர் பெற்ற பட்டுத் தொழிலின் தலைநகரம். இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களில் ஒன்று. பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரியது. சோழ விஜயநகர முகலாயப் பேரரசர்கள் ஆண்ட பூமி. அறிஞர் அண்ணா பிறந்த ஊர். தமிழ்ப் பண்பாட்டையும் வரலாற்றையும் மொழியையும் கற்பிக்கும் தமிழ்க் கல்லூரி இங்குண்டு. சென்னை வரை நீள்கிறது இம்மாவட்டம்.


இங்கு பல கோயில்கள் உள்ளன. அவற்றுள், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், வரதராஜபெருமாள் கோயில், கைலாசநாதர் கோயில் ஆகியவை முக்கியமானவை. இவ்வாலயங்கள், சாக்தர், சைவர் மற்றும் வைணவர்கள் என பலவேறு சமயப் பிரிவினரும் இங்கு வந்து தரிசித்திட வழிவகுத்து இந்து சமயத்திற்கு சிறப்பு சேர்க்கின்றது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த இடமெனும் சிறப்பையும் பெற்றது இந்நகரமாகும்.


காஞ்சி நகரம் தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஓன்றாகும். காஞ்சி நகரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் பயின்று வருகின்றது. சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தொண்டைமான் இளந்திரையன் காஞ்சி நகரத்தை ஆண்டதை பரிபாடல் மூலம் அரிய முடிகின்றது. கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே பதஞ்சலி முனிவரால் காஞ்சி குறிப்பிடப் பெறுகிறது. கி.பி. 2ஆம் நூற்றாண்டு கால சங்க இலக்கியமான மணிமேகலைக் காப்பியத்திலும் இந்நகர் குறிப்பிடப்படுகிறது. கி.பி. 4ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டு வரை பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சிபுரம், கலை, மற்றும் தமிழ், சமஸ்கிருத மொழிகளின் கல்வியில் சிறந்து விளங்கியது. பல்லவர்கள் ஆட்சிக்கு முன் சென்னை, வேலூர், திருவண்ணாமலை மற்றும் திருவள்ளுர் ஆகிய தற்கால மாவட்டங்களை உள்ளடக்கிய தொண்டை மண்டலத்தின் தலைநகராக விளங்கியது. பல்லவர்கள் ஆட்சி காலத்தில் காஞ்சிபுரம் அதன் தலைநகராக உச்ச புகழினை அடைந்தது.


புகழ் பெற்ற கைலாசநாதர் கோயிலை எட்டாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்மன் ஜெயசிம்மன் கட்டிடத் துவங்கிட, அவனது மகன் மகேந்திர வர்மனால் அப்பணி தொடரப்பட்டது. பின்னர், நந்திவர்மன் பல்லவமல்லன், பரமேஸ்வர விண்ணகரம் என்னும் விஷ்ணு ஆலயத்தைக் கட்டினான். அதே மன்னனே, தற்காலிகமாக சமண சமயத்தைச் சார்ந்திருந்தபோது, சமண பாரம்பரியம் காஞ்சியில் வளர பங்காற்றினான். சமண ஆலயங்களும் காஞ்சியில் செழித்தன.